Home » » ஹிந்தி படத்தில் வாய்ப்பு:மகிழ்ச்சியில் டாப்ஸி

ஹிந்தி படத்தில் வாய்ப்பு:மகிழ்ச்சியில் டாப்ஸி





வட இந்திய நடிகையான டாப்சியை தமிழில் நடித்த ஆடுகளம் படம்தான்
பிரபலப்படுத்தியது. அதனால் சாஷ்மே பதூர் என்ற படத்திற்கு பிறகு புதிதாக இந்தியில் படங்கள் கிடைக்காததால் தென்னிந்திய படங்களிலேயே நடித்து வந்தார். இந்நிலையில், ஆரம்பம் படத்திற்கு பிறகு முனி-3 கங்கா படத்தில் நடித்து வரும் டாப்சியை சமீபத்தில் ஒரு இந்திப்பட இயக்குனர், தான் இயக்கும் ரன்னிங் ஷாதி டாட் காம் என்ற படத்தில் ஒரு கேரக்டருக்கு டப்பிங் பேச வேண்டும் என்றுதான் அழைத்தாராம்.
ஆனால், வேகவேகமாக ஓடிச்சென்ற டாப்சி, நானே பெரிய நடிகை என்னைப்போய் டப்பிங் மட்டும் பேச அழைக்கிறீர்களே. எனக்கும் ஒரு கதாநாயகி வேடம் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தாராம். அதையடுத்து டாப்சி நடித்த இந்தி மற்றும் தமிழ்ப்படங்களைப்பார்த்த அந்த இயக்குனர், ஏற்கனவே பேசி வைத்திருந்த ஒரு புதுமுக நடிகையை ஓரங்கட்டிவிட்டு டாப்சிக்கு பக்கம் சாய்ந்து விட்டாராம். ஆக, இந்தியில் தான் நடிக்கும் இரண்டாவது படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசி நடிக்கிறார் டாப்சி.
இந்த படத்தோடு பாலிவுட்டில் ஒரு மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, அங்குள்ள முன்னணி நாயகிகள் நடிப்பது போன்று முதன்முறையாக கவர்ச்சி கதவுகளை திறக்கவும் ஒப்புதல் கொடுத்துள்ள டாப்சி, கிட்டத்தட்ட டூ-பீஸ்க்கு இணையான கவர்ச்சி உடைதரித்து அப்படத்தில் கலக்கல் பண்ணப்போகிறாராம். இதனால் இரண்டு மனதாக டாப்சியை ஒப்பந்தம் பண்ணிய டைரக்டர், அவரது தாராள மனதைப்பார்த்து எற்கனவே திட்டமிட்டதை விடவும் கூடுதலான காட்சிகளை டாப்சிக்கு தாரை வார்த்துளளார். அதோடு, டாப்சி இருக்கிற தைரியத்தில் அப்படத்தில் கமிட்டாகியிருக்கும் இன்னொரு கதாநாயகியை டம்மி பண்ணி விட்டாராம்.

spots