Home » » விஜய் யை வைத்து படம் இயக்கப் போகும் சசிக்குமார்!

விஜய் யை வைத்து படம் இயக்கப் போகும் சசிக்குமார்!

விஜய் நடிக்கும் படத்தை சசிகுமார் இயக்க உள்ளார்.கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாக்ரட்டீஸ் இயக்கும் பிரம்மன் படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். இதில் அவர் ஜோடி லாவண்யா திரிபாதி. இந்தப் படத்தை அடுத்து பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இதையடுத்து மேலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
அடுத்த ஆண்டு விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.இதுபற்றி சசிகுமார் தரப்பில் விசாரித்தபோது, இந்த வருடம் முழுதும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார் சசிகுமார். இதற்கிடையில் விஜய்யிடம் அவர் சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது மெகா பட்ஜெட் படம். 2015&ல் அதன் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிவித்தனர்.

spots