Home » » நடிகர்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்தது விஷாலைத் தான்:லட்சுமி மேனன் அதிரடி!

நடிகர்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்தது விஷாலைத் தான்:லட்சுமி மேனன் அதிரடி!

கோலிவுட், குடும்ப குத்து விளக்காக கொண்டாடும் லட்சுமி மேனன், அடக்க ஒடுக்கமான நடிகை என, பெயர் எடுத்தவர். எவ்வளவு பணம் கொடுத்தாலும், நோ கவர்ச்சி என, பிடிவாதமாக இருந்தவர். இப்படிப்பட்ட லட்சுமி மேனனின் நடவடிக்கைகளில், சமீபகாலமாக ரொம்பவே மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, கோடம்பாக்கம் வட்டாரங்கள் கும்மி அடிக்கின்றன.
விஷாலுடன், அவர் நடித்த பாண்டியநாடு படத்தில், ஒரு பாடல் காட்சியில், இதுவரை இல்லாத வகையில், குத்தாட்டம் போட்டிருந்தார். இதைப் பார்த்து, தமிழ் திரையுலகம், விழிகளை விரிய விட்டது. இப்போது, மீண்டும் விஷாலுடன் ஜோடியாக, நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில், லட்சுமி நடிக்கிறார். இதில், லட்சுமி மேனனுக்கு, முத்தக் காட்சிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர்களிலேயே, எனக்கு ரொம்ப பிடித்தது விஷாலைத் தான் என்றும், அதிரடியாக ஸ்டேட்மென்ட் விட்டு, மற்ற ஹீரோக்களை கதற வைத்துள்ளார்.

spots